நேற்று மோடி சிறிது நேரம் பேசப்போகிறார் என்றதும் இந்தியாவே பெருத்த எதிர்பார்ப்பில் இருந்தது.
பேசினார் மோடி. திகைப்பில் உறைந்தது இந்தியா.
5ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டின் விளக்குகளை எல்லாம் அணைத்து விட்டு 9 நிமிடங்களுக்கு மாடியில் நின்று உங்கள் செல்போனில் டார்ச் அடியுங்கள் அல்லது டார்ச் லைட் அடியுங்கள் அல்லது வேறு வெளிச்சத்தை காட்டுங்கள் என்றார்.
அவரது ஆதரவாளர்களே எதற்கு சொன்னார் ஏன் சொன்னார் என்று காரணங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சொன்னது பிரதமர் என்பதால் கிண்டல் அடிக்கவும் கூடாது. விமர்சிக்கவும் கூடாது. அது அவர் வகிக்கும் பதவியின் மாண்பைக் குலைத்து விடும்.
ஏதாவது புதிய திட்டங்களை அறிவித்து கட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிப்பார் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம்.
நோயின் தாக்குதலை ஓட்டு மொத்த தேசமும் ஒருங்கிணைந்து எதிர்த்து போரிட்டு வருகிறது.
லைட் அடிப்பது கொரானாவை விரட்டி விடுமா ?
பத்து நிமிடம் வீடே இருளில் ஆழ்ந்திருக்குமே ஏன்?
மணி ஒன்பது, நிமிடம் ஒன்பது என்று ஏன் தேர்ந்தெடுத்தார் பிரதமர் ?
நவம்பர் ஒன்பதாம் தேதி நடந்த இரட்டை கோபுர தாக்குதலில் ஈடுபட்ட இஸ்லாமிய தீவிரவாதிகளை நினைவுபடுத்துகிறாரா பிரதமர் ?
மோடிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த உள்குத்து வேலை ஏதும் நடக்கிறதா ?
நீங்கள் எதைச் சொன்னாலும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் ஆழமாக பதிய வைக்க இதுவே வழி என்று சொல்லி உங்களை மயக்கி விட்டார்களா?
தமிழக அமைச்சரவையே அன்று இரவு லைட் அடிக்கும் என்பது உறுதி. எதற்கு என்றால் பிரதமரை கேளுங்கள் என்பார்கள்.
ஒண்ணுமே புரியலே உலகத்திலே என்று பாட வைத்து விட்டார் மோடி .
மோடி பேசுகிறார் என்றால் எதிர்பார்த்திருந்த மக்கள் இனி எதிர்காலத்தில் பேச வந்தால் என்ன குண்டைத் தூக்கிப் போடுவாரோ என்று கதி கலங்க வைத்து விட்டார் பிரதமர்.
ஒன்பதில் அப்படி என்ன விசேடம் ?