அய்யகோ மீண்டும் அறிவுரை மட்டும்தானா ?!

modi
modi

இன்று பிரதமர் மோடி  பேசுகிறார் என்றதும் எதிர்பார்ப்பு எகிறி நின்றது.

இரண்டாவது ஊரடங்கை  அறிவித்த பிரதமர் அடித்தட்டு மக்களின் பிரச்னைகளுக்கு  ஏதாவது  பரிகாரம் சொல்வார் என்று எதிர்பார்த்து காத்து இருந்தது மக்கள் கூட்டம்.

ஏழு அறிவுரைகளை மட்டும் தாராளமாக வழங்கி போதுமான அளவு பாராட்டுதல்களையும் தந்து பெருத்த ஏமாற்றத்தை கொடுத்து விட்டார் மோடி.

ஏற்கெநெவே எட்டு ஒன்பது மாநிலங்கள் ஊரடங்கை அறிவித்து இருந்த நிலையில் பிரதமர் அதை எல்லா மாநிலங்களுக்கும் விரிவாக்கி இருக்கிறார்.

இன்னும் ஒருவாரத்தில் சில   தளர்வுகளை அறிவிக்க இருப்பதாகவும் ன்னார் பிரதமர்.

மாநிலங்கள் அறிவித்த சலுகைகள்  போதுமானவை அல்ல என்ற கருத்து பரவலாக உள்ளது.

நிதி பற்றாக் குறையால் தத்தளிக்கின்றன மாநிலங்கள்.  அவர்களுக்கு போதிய ஊக்கம் தரவில்லை.

ஒவ்வொரு முறை பேசும்போதும் மோடி தனது மதிப்பை குறைத்துக் கொண்டே  போகிறார். அவர் மீதான மதிப்பு  குறைந்து கொண்டே போகிறது.

மராட்டியத்தில் வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு  போக வழியில்லாமல் கூடுகிறார்கள் . அவர்களை தடி  அடி நடத்தி  விரட்டி அடிக்கிறார்கள்.

உலக தலைவர்கள்    பேசுவதில் இருந்தாவது மோடி  பாடம் கற்றுக் கொள்ளக் கூடாதா? கனடா பிரதமர் தன் மக்களுக்கு உங்கள் பிரச்னைகளை  நாங்கள் பார்த்துக்  கொள்கிறோம் என்று அதற்கான வழிமுறைகளையும் கூறினார்.

நமது நாட்டின் பட்ஜெட் முப்பது லட்சம் கோடி. அதில் ஐந்து லட்சம் கோடியை பொது மக்களுக்கு வழங்கினால் என்ன?