வெங்காயம் சாப்பிடாதவர்கள் உயர்ந்த சாதியா? என்ன சொல்கிறார் நிர்மலா சீதாராமன்?

nirmala-sitharaman
nirmala-sitharaman

வெங்காயம் விலை உயர்வு பற்றி நாட்டில் பெறும் கொந்தளிப்பு நிலவுகிறது. கிலோ முன்னூறு ரூபாய் அளவுக்கு மேல் போய்க்கொண்டு இருக்கிறது.

வெங்காய விலை நாட்டில் பெரிய பேசு பொருளாகி மீம்ஸ் போடுவோருக்கு தீனி தரும் பொருளாகி விட்டது. அதை அரசு எப்படி சமாளிக்கிறது என்பது ஒரு புறம இருக்கட்டும்.

அதைப்பற்றி பேச வந்த மத்திய நிதித்  துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேவையின்றி அலட்சிய விமர்சனம் செய்தது இப்போது பிரச்னை ஆகி இருக்கிறது. நான் வெங்காயம் சாப்பிடாத குடும்பத்தில் இருந்து வந்ததால் எனக்கு வெங்காய விலை உயர்வு பற்றி ஏதும் தெரியாது .” என்று விமர்சித்து இருக்கிறார்.

அவர் பார்ப்பன குடும்பத்தில் இருந்து வந்ததைத் தான் அப்படி குறிப்பிடுகிறார் என்று நாம் புரிந்து கொள்ளலாம். பொதுவாக பார்ப்பனர்கள் வெங்காயம் பூண்டு சமையலில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்று கேள்விபட்டு இருக்கிறோம். அது அவர்களின் வழக்கமாக இருந்தால் அதைப்பற்றி மற்றவர்களுக்கு கவலை இல்லைதான்.

ஆனால் ஏதோ வெங்காயம் சாப்பிடாதவர்கள் எல்லாம் உயர்சாதி என்பது போலவும் சாப்பிடுபவர்கள் எல்லாம் கீழ் சாதி என்பது போலவும் அவரது கருத்து இருந்தால் அது மிகவும் கண்டிக்கத் தக்கது. வெங்காயம் சாப்பிடாதவர்கள் எல்லாம் உயர்ந்தவர்கள் அல்ல. சாப்பிடுபவர்கள் கீழ் மக்களுமல்ல. இப்படி எல்லாம் கருத்து தெரிவிப்பவர் ஒரு அமைச்சர் என்பதுதான் துயரம்.

அவர் அமைச்சர் பதவிக்கே தகுதி யானவர்தானா என்ற கேள்வியை யும் அவரது இந்த கருத்து எழுப்பி உள்ளது. மோடிக்கு பொருளாதாரம் தெரியாது என்று இன்று சுப்பிரமணிய சாமி கூறியிருக்கிறார். வெங்காய விலை உயர்வு பற்றி கூறும்போது இப்படி விமர்சிக்கிறார் சாமி. முதலில் அதற்கு பதில் சொல்லட்டும் நிர்மலா சீதாராமன்.