மலர் தூவ லட்சக் கணக்கில் விரயம் செய்த விமானப்படை..

helicopter
helicopter

இவர்களுக்கு யார் இப்படியெல்லாம் சொல்லிக் கொடுப்பது என்று தெரியவில்லை. புதிது புதிதாக சிந்தித்து கொரொனா காலத்தில் வேடிக்கை காட்டுகிறார்கள்.

விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் மருத்துவமனைகள் மீது பறந்து மலர்கள் தூவி நன்றி  சொல்லி இருக்கின்றன.

யாருக்கு? மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் ?

நன்றி சொல்ல வேறு வழி தெரியவில்லையா அதிகாரத்தில் உள்ளோருக்கு?

இன்னும் கொரொனா ஆபத்து நீங்காதது மட்டுமல்ல அனுதினமும் அதிகரித்துக் கொண்டே போகிறது .

எப்போது விடியும் என்று மக்கள் திகைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாழ்த்துச் சொல்லும் நேரம் இதுவா? அதுதான் மணி அடித்தாகி விட்டது. விளக்கு போட்டாகிவிட்டது. இன்னும் என்ன செய்ய வேண்டும்?

மாலை நேரத்தில் அவரவர் மொழியில் தாய் நாட்டை போற்றி முழக்கம் இடலாமா?

ஜெய் ஹிந்த்! பாரத் மாதா கி ஜெய் ?!  வாழ்க பாரதம் ?! அன்னை பாரதம்  வாழ்க?!

என்ன சொல்ல வேண்டும் சொல்லுங்கள்?!

அதெல்லாம் கூட செலவில்லாத வாழ்த்துக்கள்.

ஆனால் இது லட்சக் கணக்கில் செலவு . ஹெலிகாப்டர்கள் மலர் தூவின. அவை மாடியில் நின்று கொண்டிருந்த மருத்துவ பணியாளர்கள் மீது விழாமல் எங்கோ விழுந்தன.   மலர் தூவ வேண்டுமா என்று கேட்பதே கூட தியாகம் செய்பவர்களை கேலி செய்வதற்கு அல்ல. செலவைத் தவிர்த்திருக்கலாம் என்பதைத் தவிர இந்த விமர்சனத்திற்கு வேறு நோக்கமில்லை.  அவர்களுக்கு நிதியாக எவ்வளவு  கொடுத்திருந்தாலும் இந்த விமர்சனம் வந்திருக்காது.

கொரொனா மிரட்டுகிறது ! விளையாட்டுகளை நிறுத்துங்கள் !

பிரதமருக்குத் தெரிந்துதான் இது நடக்கிறதா?!