நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு வேண்டுமா? வேண்டாமா? சென்னை உயர் நீதி மன்ற பரிந்துரையில் அவசரம் ஏன் ?

Share
            பதினெட்டு நீதிபதிகள் காலி இடங்கள் இருக்கும்போது ஒன்பது பேரை மட்டும் ஏன் பரிந்துரைக்கிறீர்கள் அதன் மூலம் பிற்பட்டோர் நலன் பாதிக்கிறது என்று முறையீடு செய்த பின்பும் சென்னை உயர் நீதி மன்றம் ஒன்பது பேரை பரிந்துரைக்க அதை பரிசீலிக்க வேண்டாம் என்று வழக்கறிஞர்கள் மீண்டும் மனுப்போட பிரச்சினை பெரிதாகி நிற்கிறது.
               ஏற்கெனவே பிராமணர்களும் முற்பட்ட வகுப்பினரும் அதிக பிரதிநிதித்துவம் பெற்று இருப்பதை சுட்டிக் காட்டி இதிலும் சமூக நீதி பின் பற்ற வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கி இருக்கிறது.
                  நீதிபதிகள் தாங்களே புதியவர்களை நியமித்துக் கொள்ளும் முறையில் குறைபாடுகள் இருப்பது அறியப் பட்டு தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைப்பது குறித்த வழக்கு உச்ச நீதி மன்ற பரிசீலனையில் இருக்கிறது.
                   இந்நிலையில் பதினெட்டு பேர்களுக்கு பதிலாக ஒன்பது பேரை மட்டும் ஏன் பரிந்துரைக்க வேண்டும் என்ற கேள்விக்கு உயர் நீதி மன்றம் ஏற்றுக்கொள்ளத் தக்க பதிலை தராமல் எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது எனவே அனுப்புகிறோம் என்ற ரீதியில் செயல் படுவது சரியல்ல .
               ஒன்று பதினெட்டு பேர்களையும் தக்க ஆய்வு நடத்தி  சமூக நீதியை அமுல்படுத்தி அனுப்புங்கள்  அல்லது உச்ச நீதி மன்ற தீர்ப்புக்காக காத்திருங்கள். .   இதுவே நீதி.       நியமனத்தில் நீதி இல்லை என்றால் நியமிக்கப்பட்டவர்கள் எப்படிப்பட்ட  நீதியை  வழங்குவார்கள்.?
           
       
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

This website uses cookies.