ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க எந்த தியாகத்தையும் செய்வேன்!!!! விஜயகாந்த் சபதம்!!!! உறுதியாக இருந்தால் ஆட்சி மாற்றம் உறுதி!!!!

Share
                தனது ரிஷிவந்தியம் தொகுதியில் மண லூர்பேட்டையில்
பேசிய விஜயகாந்த் தமிழகத்தில் பிரச்சினைகள் குவிந்து கிடக்கும்போது முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் சென்று ஓய்வெடுத்துக் கொண்டிருப்பது பற்றி பேசிவிட்டு எதிர் வரும் தேர்தலில் எந்த காரணத்தைகொண்டும்  மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை பிடிக்க அனுமதிக்க கூடாது என்றும் அதற்காக தான் எந்த தியாகத்திற்கும் தயார் என்றும் பேசினார்.

            அவரத்து பேச்சு தமிழகத்தில் ஒரு வலுவான எதிர் அணி உருவாகுமா என்ற கேள்விக்கு சரியான பதிலாக அமைந்திருக்கிறது.
           இடையில் வைகோ தனது மக்கள் நல கூட்டமைப்புக்கு விஜயகாந்த் வருவார் என்று  நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். .
                நாலு கட்சிக்கும் நாலு சதவீத வாக்கு.  இதை வைத்துக்கொண்டு நாங்கள்தான் அதிமுக- திமுகவுக்கு மாற்று என்று சொன்னால் சிரிக்கத்தான் செய்வார்கள்.
            நாலு கட்சி கூட்டணி அ தி மு க வுக்கு சாதகமானது என்பதை சின்னப் பிள்ளைகள் கூட சொல்லும்.  பெரிய ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை
             தான் தலைவன் ஆவதற்கு நாலுபேரை பலி கொடுக்க தயங்காதவர் வைகோ.     நாம் நிற்பதால் ஜெயலலிதா வந்து விடுவார் என்று கேட்டதற்கு வரட்டுமே ,ஸ்டாலின் வரக்கூடாது என்றார் வைகோ என்ற குற்றச்சாட்டிற்கு இன்று வரை மறுத்து எதுவும் வைகோ சொல்ல வில்லை.
             தடுக்கப் பட வேண்டியது ஜெயலலிதாவின் கொடுங்கோல் ஆட்சி என்பதை ஒப்புக் கொள்பவர்கள் தி மு க வின் குறைகள் பேசித் தீர்த்துகொள்ளத் தக்கவை உண்பதை உணர மாட்டார்களா?
          எல்லாவற்றையும்  மீறி தனியாக நிற்போம் என்று  பா  ம க  சொல்லுமானால் அவர்களது இலக்கு 2021 தேர்தலாக இருக்கலாம்.
தனித்து நின்று  8 – 10 சத வீத வாக்கை வாங்கி விட்டால் தங்களது பேரம் பேசும் திறனை நிரூபித்து அடுத்த தேர்தலில் ஆட்சியில் பங்கு பெறலாம் என்பது அவர்களது திட்டமாக இருக்கலாம்.;
          இது எதுவும் இல்லாமல் நான்கைந்து சத வீத வாக்குகளை பிரித்தே தீருவோம் என்பவர்கள் அ தி மு க வின் கூலிகள் என்ற முடிவுக்கே மக்கள் வருவார்கள்.     இருக்கும் மதிப்பும் இல்லாமல் போய் மக்களை சந்திக்கும் உரிமையையும் இழப்பார்கள்.
           இந்த சூழ்நிலையில் விஜயகாந்தின் இந்த அறிவிப்பு  முக்கியத்துவம் பெறுகிறது.  
           அ தி மு க ஆட்சியை அகற்ற தி மு க இல்லாமல் முடியாது என்ற நிலையில் நியாயமான பேச்சு வார்த்தை நடத்தி இறுதிக் கட்டத்தில் வெற்றி பெறும் அணியை உருவாக்குவதில் விஜயகாந்தின் பங்கு பெரும்பங்காக இருக்கும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
             அப்படி ஒரு அணி அமையும் பட்சத்தில் பா ம க வின் வாக்குப் பிரிப்பையும் மீறி  அதிமுக தோல்வியைத் தழுவும் என்பது உறுதி. 

This website uses cookies.