வழிகாட்டும் கர்நாடகம்! தாய்மொழி வழிக்கல்வியில்!

Share
தமிழகத்தில்  தமிழை ஒரு பாடமாகக் கூட படிக்காமல் பட்டம் பெற முடியும் என்ற அவல நிலை இருக்கிறது.
   தாய் மொழி வழிக் கல்விதான் குழந்தைகளின் சிந்தனையை தூண்டும் என்று யுனெஸ்கோ கூறியுள்ளது.
   கர்நாடக அரசின் முந்திய முயற்சிகளுக்கு உச்ச நீதி மன்றம் துணை செய்யாது பயிற்று மொழி  ஆணை கருத்துரிமைக்கு எதிரானது என்று கூறி அந்த ஆணையை ரத்து செய்து விட்ட நிலையில்,,  விளக்கம் கோரும் மனுவை தாக்கல் செய்து விட்டு,   கர்நாடகா வில் தற்போது கன்னடம் தொடர்ந்து பயிற்று மொழியாக கடைபிடிக்கப் பட்டு வருகிறது.
   இந்த நிலையில் மத்திய அரசின் சட்டமான கல்வி உரிமை சட்டத்தின் பிரிவு  29 ( எப் ) ல் இடம் பெற்றுள்ள நடைமுறைக்கு சாத்தியமான வரையில் தாய் மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்ற வாசகத்தில் நடைமுறைக்கு சாத்தியமான வரையில் என்ற வாசகத்தை நீக்குவதன் மூலம் தாய்மொழி  அதாவது கன்னடம் பயிற்று மொழியாகிவிடும் என்று அந்த அரசு கருதி அதற்கான சட்ட திருத்தம் கொண்டு வர இருப்பதை சுட்டிக் காட்டி அதேபோல் தமிழ் நாட்டு அரசும் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் கோரியிருப்பது மிகவும் சரியான ஒன்றேயாகும்.
   தமிழ் நாட்டில் ஐந்தில் ஒரு பங்கினர் தமிழை தாய் மொழியாக கொண்டிராதவர்கள்.
   அவர்கள் வாழட்டும் !    அவர்கள் தமிழ் மொழிக் கல்விக்கு எதிரானவர்கள் என்பதில்  உண்மையில்லை.
   தமிழ் நாட்டில் தமிழ் மொழிக்  கல்விக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் கட்டுப் படுத்தப் பட வேண்டியவர்கள். .
  தமிழில் அரசியல் வேண்டவே வேண்டாம். !
 
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

This website uses cookies.