பகுத்தறிவுப் பிரசாரம் செய்த முன்னாள் துணை வேந்தர் குல்பர்கி படுகொலை!!!??? மகாராஷ்ட்ராவைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் பாசிசக் கும்பல் வெறியாட்டம்!!??? தடுக்காவிட்டால் மற்ற மாநிலங்களுக்கும் பரவும் அபாயம்!!!

Share

       கன்னட எழுத்தாளரும் முன்னாள் கன்னட பல்கலைக்கழகதுணை வேந்தரும் ஆராய்ச்சியாளருமான     77  வயது எம் எம் குல்பர்கி தார்வாரில் வீட்டில் இருந்தபோது காலை நேரத்தில்  கதவைத் தட்டிய கொலைகாரர்களால் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார். .
           வீரசைவ இயக்கத்தின் தத்துவத்தையும் அடிப்படையில்லா நம்பிக்கைகளையும் அறிவுபூர்வமாக எதிர்த்து ஆராய்ச்சி செய்து எழுதியதால் இவர் மீது பலர்  கோபம  கொண்டிருக்கலாம்.
            அதுமட்டுமல்ல , விக்ரக ஆராதனை மீதும் மூட நம்பிக்கைகள் மீதும் அவருக்கு கடுமையான ஆட்சேபணைகள் இருந்தன.  அவருக்கு குடும்ப பிரச்சினைகளோ விரோதிகளோ இல்லை என்று குடும்பத்தார் கூறுகின்றனர்.
            இவருக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு சில மாதங்களுக்கு முன்பு விலக்கப்பட்டது ஏன் என்பது புதிர்தான்.
             கர்நாடகாவில் இதுதான் முதல் கொலை என்றாலும் பக்கத்துக்கு மாநிலமான மகாராஷ்ட்ராவில் நடந்த இரு கொலைகளையும் ஒப்பிட்டால் சந்தேகம் இல்லாமல் இது இந்து பயங்கர வாதிகளால் நடத்தப் பட்ட திட்டமிட்ட படுகொலை என்பது புலப்படும்.
               2013   ல் 65  வயதான டாக்டர் நரேந்திர தபோல்கர் காலை நடைபயிற்சியில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதேபோல் வலது கம்யூனிஸ்ட் தலைவரும் பகுத்தறிவு வாதியுமான கோவிந்தராவ் பன்சாரே நடைபயிற்சியின் போதுதான்     2015   பிப்ரவரி  16 ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.    
           இருவரும் நண்பர்கள் இனைந்து பணியாற்றியவர்கள்.  அதிலும் தபோல்கர் போலி சாமியார்களுக்கு எதிராகவும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் மாநிலம் தழுவிய இயக்கத்தையே நடத்தியது மட்டுமில்லாமல் மகாராஷ்டிரா சட்ட மன்றத்தில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான ஒர் சட்டம் இயற்றவும் முனைப்பு காட்டி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
             விக்ரக ஆராதனைக்கும் மூடநம்பிக்கைக்கும் எதிரான போராட்டத்தை யார் முன்னெடுத்தாலும் அவர்கள் சுட்டுக் கொல்லப் படுவார்கள் என்று இந்துத்துவ சக்திகள் உறுதியாக இருப்பதையே இந்த சம்பவங்கள் காட்டுகின்றன.
               வழக்கம் போல இதில் விரோதம் சொத்துப் பிரச்னை இருக்கிறதா என்றும் ஆராய்கிறோம் என்று காவல் துறை சொல்வது திசை திருப்பும் உத்தி தானே தவிர வேறல்ல.
             இந்தியா முழுவதும் எழும்  கண்டனக்குரல்கள் அரசை உண்மையை கண்டறிந்து குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தி தண்டணை பெற்றுத்தரும் என்று நம்புவோம்.
              மெத்தனமாக இருந்தால் இந்தக் கும்பல் மற்ற மாநிலங்களுக்கும் பரவும் அபாயம் இருப்பதை அரசு உணர வேண்டும்.
            பகுத்தறிவு சிந்தனைகளுக்கு எதிரான  சமூக அமைதியை கெடுக்கும்  இந்த கும்பலை அடக்கியே ஆக வேண்டும்.
         

This website uses cookies.