அமெரிக்காவின் துரோகத்துக்கு துணை போகிறதா இந்தியா? ஐ.நா. மதிப்பிழந்து போகிறது. !!! ஈழத்தின் அவலம் தொடரப் போகிறதா?

Share
     போர்க்குற்ற விசாரணையை ஐ.நா. குழு துவங்கி  இலங்கையீன் ஒத்துழைப்பு இல்லாமலேயே அதன் தலைவர்  அல் ஹுசைன் இறுதி அறிக்கை தாக்கல் செய்து விட்டார்.  
    அதில் அவர் குறிப்பிட்டு இருக்கும் கருத்து தெளிவானது. ஒன்று போர்க்குற்றம் குறித்து சர்வதேசிய நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்.  இரண்டு, போர்க்குற்றம் குறித்து உள்நாட்டு விசாரணை உகந்தது அல்ல.
       ஆனால் இலங்கை இதை ஒப்புக்கொள்ள முடியாது என்ற பிறகு அமெரிக்கா தனது நிலையை மாற்றிக்கொண்டு உள்நாட்டு விசாரணையில் காமன்வெல்த் நாட்டு நீதிபதிகள் ஆலோசனை சொல்லலாம் என்று புதிய தீர்மானத்தை வடிவமைத்து அது வருகிற
30  ம் தேதி விவாதத்துக்கு வருகிறது.
           இதைவிட பச்சைத் துரோகம் இருக்க முடியாது.   இலங்கை நாட்டிலேயே விசாரணை நடத்துவதற்கு விசாரணையே தேவை இல்லை என்ற முடிவுக்கு தமிழர்கள் வரலாம்.    ஏனெனில் எந்த நியாயமும் உள்நாட்டு விசாரணையில் கிடைக்கப் போவதில்லை.
            கலைஞர் சர்வதேச விசாரணையை உறுதி படுத்த கோரி மத்திய அரசை வேண்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதேபோல் எல்லா கட்சிகளும் சர்வதேச விசாரணை வேண்டு;ம் என்றும் கோருகிறார்கள்.   அதுதான் இலங்கைத் தமிழர்களுக்கும் உடன்பாடானது.   ஆனால் தமிழர்கள்  எதிர் பார்க்கும் எதையும் செய்ய இலங்கை ஆட்சியாளர்கள் தயாராக இல்லை.
           காங்கிரஸ் கொண்ட கொள்கையை விட மிக மோசமான கொள்கையை பா.ஜ. க அரசு கொண்டிருக்கிறது.    தன் நாட்டின் ஒரு பகுதியாக இருக்கிற தமிழர்களுக்கு இலங்கை பகை நாடு. ஆனால் இந்தியாவுக்கு நட்பு நாடு என்ற  முரண்பட்டு நிற்பதை இந்தியா உணரவில்லை.
           தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு சாலை அமைக்கும் திட்டம் எதற்காக?   சேது சமுத்திர திட்டத்தை நிறுத்தும் உபாயம் தானே?
          போர்க்குற்ற விசாரணை நடந்தால் சிங்களர்களுக்கு உலக சமுதாயம் மீது அச்சம் வரும்.   தமிழர்களுக்கு  உரிய அரசியல் தீர்வை அளிப்பது பற்றி சிந்திப்பார்கள்..
          தண்டணை இல்லை என்றால் தமிழர்களுக்கு உரிமை கொடுப்பது பற்றி  சிந்திக்க வேண்டிய அவசியம் சிங்களர்களுக்கு எழாது.
           ஐ நா வும் அநியாயத்துக்கு துணை போனால் எப்படி நீதி நிலை  பெறும்?
            அநியாயம் நிலைக்காது!!!!!

This website uses cookies.