நடிகர் சங்க தேர்தலால் முடியுமா பிரச்சினைகள்? பெயர் மாற்றம் வரும்! ,ஒப்பந்தம் ரத்துஆகுமா? வேறு சங்கம் உருவாகுமா?,

Share
    இன்னும் சில நிமிடங்களில் நடிகர் சங்க தேர்தல் முடிவுகள்  வெளியாக இருக்கின்றன.
       முடிவுகள்  எப்படி இருந்தாலும் சில நல்லதுகள் நடக்கும் என்ற நம்பிக்கையை  இந்த தேர்தல் கொடுத்திருக்கிறது.
      தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர்  மாற்றம் செய்ய வேண்டும் என்று பாரதிராஜா  சீமான்  மற்றும்  பல தமிழ் அமைப்புகள் கோரிக்கை வைத்திருந்தன .

          ரஜினி பெயர் மாற்றத்திற்கு இன்று குரல் கொடுத்திருக்கிறார்.   இனிமேல் யார் வந்தாலும் பெயர் மாற்றத்தை ஒத்தி வைக்க முடியாத நிலைமையை அவரது குரல் உறுதி படுத்தியிருகிறது.   கமல் இந்திய நடிகர் சங்கம் என்றால் மகிழ்வேன் என்றது ஒரு ஜோக்.  இந்த கருத்தை மலையாள  கன்னட, தெலுகு நடிகர் சங்கங்களிடம் வைக்க அவருக்கு துணிவு இருக்குமா?
            பிரச்சினையின் மையமே நடிகர் சங்கத்துக்கு சொந்தமான  19  கிரௌண்ட் இடத்தில் சங்கமே சொந்தமாக கட்டடம் கட்டுவதா அல்லது மற்றவரிடம் கொடுத்து கட்ட சொல்லி மாதம்  25  லட்சம் வாடகை மட்டும் பெற்றுக் கொள்வதா என்பதுதான்.      1  1/2  கோடி ரூபாய் கடனை கட்ட முடிந்த சங்கத்துக்கு ஒரு கட்ட முடியாதா?   பிறர் கட்டி 25   லட்சம் வாடகை கொடுக்க முடியும் என்றால்அவருக்கு எவ்வளவு லாபம்  வரும்? .  அதை நடிகர் சங்கமே கட்டினால் அதை விட அதிகம் லாபம் வருமே அதை வைத்து நடிகர்களுக்கு அதிக
நன்மை செய்ய முடியுமே என்பதில் உண்மை இருக்கிறதா இல்லையா?
              மரியாதை வேண்டும் என்பவர்கள் சில ஆண்டுகளில் பதவியை விட்டு விலகி புதியவர்களுக்கு   இடம் கொடுப்பதுதானே முறை.    நாங்களே இருப்போம்  என்றால் இதை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் என்றுதானே பொருள்?
             யார் வென்றாலும் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டால் பிரச்சினை இல்லை.    மாறாக அதை வலியுறுத்தினால் பிரச்சினை தீராது.
             சங்கம்  உடைந்து இரண்டாகும் வாய்ப்பும் இருக்கிறது. நடிகர்கள் சங்கத்தில் தமிழர்கள் ஆதிக்கம் இல்லை என்பது வரலாற்று கொடுமை.  அமுக்கி வைக்கப் பட்டவர்கள் இன்னும் எழுந்திருக்க வில்லை .  யார் வேண்டுமானாலும் வரலாம். ஆதிக்கம் செலுத்த நினைப்பதுதான் தவறு. கலைக்கு மொழி சாதி இல்லை என்று போதிப்பவர்கள் எல்லா மாநிலங்களிலும் இதை சொல்ல முடியுமா?
            கள்ள ஒட்டு, தபால் ஓட்டுகளில் குளறுபடி , வாக்காளர் பட்டியல் தவறுகள்  , 3139    சங்க உறுப்பினர்களுக்காக பொதுத்தேர்தல் போல பத்திரிகைகளில் லட்சகணக்கில் விளம்பரங்கள்  என்று எல்லா தேர்தல்களிலும் நடக்கும் தில்லு முல்லுகள் இதிலும் நடந்திருக்கின்றன .
..    நீதிபதி தலைமையில் நடந்திருபதால் எல்லாரும் முடிவை ஏற்றுகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருகிறார்கள்.
           எது எப்படியோ கடந்த கால தவறுகள்  திருத்தப் பட்டால் வரவேற்கலாம். எது நடந்தாலும் நன்மைக்கே!!!

This website uses cookies.