காந்திஜி பிரிட்டிஷ் ஏஜென்டாம் ! நேதாஜி ஜப்பானிய ஏஜென்டாம் ! மார்கண்டேய கோட்சே ( கட்ஜு) கூறுகிறார்? பாராளுமன்றத்தின் கண்டன தீர்மானம் போதுமா? பின்னணி என்ன?

Share
             மார்கண்டேய கட்ஜு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி . கொலையாளி கோட்சேவின் சிலையை திறப்போம் என்று சில சக்திகள் குரல் கொடுத்து அதையும் மத்திய மாநில அரசுகள் தண்டிக்காது கண்டும் காணாமலும் இருந்ததால் ஊக்கமடைந்த சக்திகள் இவரை தூண்டி விட்டு காந்திக்கு எதிரான கருத்துக்களை விதைக்க பயன் படுத்துகிறா ர்களோ  என்ற சந்தேகத்தை இவரது எழுத்து எடுத்துக் காட்டுகிறது.
             உலகத்தையே திரும்பிப்பார்க்க வைத்த சத்தியாக்ரஹ கொள்கையையும் இவர் குறை கூறுகிறார். காந்தியின் பொருளாதார கொள்கையையும் மோசமாக விமர்சித்திருக்கும் இவரை கண்டித்து இந்திய பாராளுமன்றம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி இருக்கிறது.;
           அது போதுமா? என்பதுதான் கேள்வி?
          யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பேசலாம்.     ஆனால் ஒரு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தேசத்தின் தந்தை என்று போற்றப் படுபவரைப் பற்றி இப்படி தான்தோன்றித்தனமாக கருத்து தெரிவிப்பது என்பது சாதாரணமானதல்ல.
           தண்டிக்கத் தக்க குற்றத்தை அவர் செய்து இருக்கிறார்.
          உயர் சாதியை சேர்ந்தவர்கள் குற்றம் செய்யும்போது மற்றவர்கள் கண்டிப்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள்.
            தண்டிக்கப் படுவோம் என்ற உணர்வு இருந்தால் இப்படிப் பட்டவர்கள் இப்படி குற்றம் இழைக்கத் துணிய மாட்டார்கள்.
           கோட்சேக்கள் இன்னும் பலர் கட்ஜு உருவில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
           காந்திஜியை ”  a British agent who did great harm to India ”   என்று எழுதியிருக்கும் இவரை நீதிபதி என்று அழைப்பதே அவமானம்.
             காந்திஜி ஒன்றும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரல்ல .
அவர் வாழ்ந்த காலத்திலும் இப்போதும் கூட பலர் விமர்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.    அதே உரிமை கட்ஜுவிற்கு இல்லையா என்று கேட்கலாம்.
             பா. ஜ. க. ஆட்சிக்கு வந்த பிறகு காந்திஜியை தேசப் பிதா என்ற நிலையில் இருந்து அகற்றும் வேலையில்  இந்து மகா சபையின் போர்வையில் கோட்சேவின் செயலைப் பாராட்டும் வேலையில் சிலர் கிளம்பியிருக்கும் சூழலில்தான் இந்த கட்ஜுவின் கருத்தை கவனிக்க வேண்டும்.
            யாரை திருப்திப் படுத்த இவர் விரும்புகிறார்.? அவர்களிடமிருந்து இவர் என்ன எதிர் பார்க்கிறார்.?     மோடி அரசிடமிருந்து எந்த பதிலையும்எதிர்பார்க்க முடியாது?
          ஏன்  என்றால் அவர்கள் உள்ளுக்குள் மகிழ்பவர்கள். !!!!!

This website uses cookies.