லலித் மோடியிடம் பணம் வாங்கினாரா சுஷ்மா சுவராஜ் ??? ராகுல் காந்தி குறிப்பிட்டு குற்றம் சாட்டியும் மவுனம் காப்பதின் பொருள் என்ன?

Share

           நாடாளுமன்ற முடக்கத்திற்கு லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மாவும் வசுந்தராவும் உதவிய குற்றச்சாட்டு முக்கியமானது.
            அதில் உண்மை இருக்கிறதா என்பது ஒரு புறம இருக்க சுஷ்மா குடும்பம் நீண்ட கால தொடர்பு வைத்திருந்த லலித் மோடி குடும்பத்திலிருந்து வாங்கிய பணம் எவ்வளவு என்றும் அதன் வங்கி  கணக்கு விபரங்களை வெளியிட வேண்டும் என்றும் அதுவரை நாடாளுமன்றம் இயங்க அனுமதிக்க முடியாது என்றும் ராகுல் திரும்ப திரும்ப கோரி வருகிறார்.
              அவதூறு சுமத்தும் ராகுல் மீது சுஷ்மா வழக்கு தொடுக்க உரிமை இருக்கிறது.  இருந்தும் சுஷ்மா அமைதி காக்கிறார்.
                 ராகுலிடம் கணக்கு விபரங்கள் இல்லாவிட்டால் குறிப்பிட்டு குற்றம் சாட்ட மாட்டார் என்பது தெரிகிறது.
               இதில் பொறுப்பற்றவர் யார் குற்றவாளி யார் என்பது பொது மக்களுக்கு தெரிய வேண்டும்.
               தேடப்படும் குற்றவாளியான லலித் மோடிக்கு சுஷ்மா எப்படி சிபாரிசு செய்தார் என்ற குற்றச்சாட்டு விவாதிக்கப் பட்டு வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டை ஒதுக்கி விடமுடியாது.
             பா ஜ க வின் முன்னணி  தலைவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் மோசமான விளைவுகளை கட்சி சந்திக்க நேரிடும் என்றாலும்  உண்மையை நீண்ட நாட்களுக்கு மறைக்க முடியாது.
             நிலைமையை மோசமாக்கும்  விதமாக நரேந்திர மோடிக்கும் அமித் ஷாவுக்கும் லலித் மோடியிடம் நெருக்கம் இருந்தது என்று கபில் சிபல் குற்றம்  சாட்டி  சான்றுகளை அடுக்குகிறார்.
            தெளிவு படுத்த வேண்டியது பா ஜ க அரசின் கடமை???
           
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

This website uses cookies.