சட்டமன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஜெயலலிதா அரசு தயங்குவது ஏன் ? மக்களுக்கு உண்மை தெரியாமல் மறைப்பது குற்றமல்லவா?

Share
          சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜெகதீஸ்வரன் என்பவர் தொடுத்த வழக்கில் சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழ்நாடு அரசு ஆட்சேபணை தெரிவித்துள்ளது..
           கேரளா, கர்நாடகா , ஆந்திர ,டெல்லி அரசுகள் ஒளிபரப்ப தயங்காத போது தமிழ்நாடு மட்டும் தயங்குவது ஏன்/
           அரசியல் சட்டத்தின் பிரிவு 118 மக்கள் மன்றங்கள் தங்களுக்கு தாங்களே விதிகளை வகுத்துக் கொள்ள உரிமை வழங்குகிறது. அதன்படி வகுக்க பட்ட விதிகளின் படி சபாநாயகருக்கு ஒளிபரப்ப உரிமை கொடுக்க அதிகாரம் இருக்கிறது.  
            2004 ல் இருந்து  பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேரடி ஒளிபரப்பு நடக்கிறது.  மய்யமண்டப்பதில் எம்பிக்கள் கூடுவது மசோதாக்களை கிழித்து எறிவது போன்றவை நடக்கின்றன.   அதை பொதுமக்கள் பார்க்கின்றனர்.    எடை போடுகின்றனர்.   என்ன கேட்டு விட்டது.
             நிதி வசதி இல்லை என்கிறார்கள்.   தனியார் சேனல்களுக்கு உரிமை கொடுத்தால் என்ன?    எல்லா நாடுகளிலும் நடக்கின்ற நடைமுறை தானே?
               அம்மா தாயே என்று மூச்சுக்கு முன்னூறு தடவை துதி பாடுவது, யாராவது எழுந்தால் அமைச்சர்கள் எழுந்து ஒரு மணி நேரம் விளக்கம் என்ற பெயரால் பேசிக்கொண்டே அவர்களை பேச விடாமல் தடுப்பது, தடதடவென்று மேசையில் தட்டிக்கொண்டே இருப்பது , கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்களை திட்டுவது, கடுமையான தண்டனைகளை கொடுத்து வெளியேற்றும்போது மறுத்தால் காவலர்களை வைத்து வெளியேற்றுவது என்று ஜனநாயகத்துக்கு புறம்பான அனைத்தையும் செய்வதால் அவை மக்களுக்கு தெரியாமல் மறைக்க வேண்டிய கட்டாயம் ஆளும் கட்சிக்கு இருக்கிறது என்பதைத்தான் அரசின் ஆட்சேபணை காட்டுகிறது.
                 சமீபத்தில் மத்திய தகவல் ஆணையம் கொடுத்த உத்தரவின் பேரில் டெல்லி அரசு சட்டமன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தொடங்கியது. அதேபோல் உயர்நீதிமன்ற உத்தரவு இருந்தால்தான் அரசு ஒளிபரப்பும் என்றால் மக்களுக்கு இறுதி நம்பிக்கை நீதிமன்றம்தான்.
                ஆட்சியின் அந்திம காலத்தில் இருக்கும் ஆட்சியாளர்களுக்கு நீதிமன்றம் தரும் உத்தரவுகளை நிறைவேற்றும் கடமையையாவது செய்ய மனம் வருமா?
                இல்லை சட்டத்தின் பொந்துகளில் ஒளிந்து கொள்வார்களா/
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

This website uses cookies.