மத்திய அரசு மீண்டும் வஞ்சகம்! காவிரி ஆணையம் இனி ஜல சக்தி துறை அமைச்சகத்தின் கீழ்

cauvery-eps
cauvery-eps

காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்னையில் தொடர்ந்து மத்திய அரசு  தமிழ்நாட்டுக்கு எதிரான நடவடிக்கை களையே எடுத்து வருகிறது.

அதில் இப்போது காவிரி நதி நீர் ஆணையத்தை ஜல சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்து  வெளியிட்ட அரசிதழ் ஆணை.

வழக்கம் போல தமிழ்நாடு அரசின் பொதுப்பணி துறை செயலாளர் மணிவாசன் அறிக்கை வெளியீட்டு இதனால் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு என்ர்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்திருக்கிறார்.கடந்த ஆண்டு நீர்வள ஆதாரம் நதிநீர் மேம்பாடு மட்க்ரும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் மற்றும் குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகம் ஆகிய இரண்டையும் இணைத்து புதிதாக ஜல சக்தி துறை அமைச்சகத்தை ஏற்படுதியதாகவும் அதில் அதன் கீழ் இயங்கும் துறைகள் நிறுவனங்கள் குறித்த விதிகளில் திருத்தம் மேற்கொண்டது முற்றிலும் நிர்வாக நடவடிக்கை  என்று  சமாதானம் சொல்லி  இருக்கிறார்.

சொல்ல மறந்தது என்னவென்றால் இதை இப்போது ஏன் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான விளக்கம்.

05/02/2007  – காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை

/02/2013 – இறுதி தீர்ப்பு மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது .

/02/2018 –  6 வார காலத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும்

ஒழுங்காற்றுக் குழுவை அமைக்க உச்சநீதி  மன்றம் உத்தரவு.

01/06/2018 – மத்திய அரசின் அரசிதழில் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையமாக

அமைக்கபட்டது.

24/02/2020 – ஜல சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவந்து அரசிதழ் வெளியீடு.

இதுவரை முழுநேரத் தலைவரும் நியமிக்கப்படவில்லை. நீர்ப்பாசனத் துறையின் செயலாளரே பொறுப்புத் தலைவராம்.

நான்கு நாட்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் முதலியவைகளை தடை செய்து மாநக காவல் ஆணையர்  ஒரு உத்தரவிட்டிருந்தார்.

ஒருவேளை அவர்க்கு இந்த செய்தி முன்கூட்டியே தெரிந்து இருக்குமோ?

உத்தரவை திரும்ப பெறவில்லை என்றால் போராட்டம் நடத்தப்  போவதாக திமுக தலைவர் ஸ்டாலினும் , வைகோ ,முத்தரசன் உள்ளிட்ட பல கட்சி தலைவர்களும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆனால் ஆளும் கட்சி மத்திய அரசுக்கு சாமரம் வீசிக்கொண்டிருந்தால்  எங்கே போராட்டம் நடத்துவது.?

தன்னாட்சி அமைப்பாக சுய அதிகாரம் கொண்டு ஆணையம் இயங்கும் என்று மத்திய  அரசு உத்தரவாதம் தர முடியுமா?

தமிழக அரசின் செயலாளர் கொடுத்த அறிக்கையை மத்திய அரசின் நீர்வளத்  துறையின் செயலாளர் கொடுத்திருக்க வேண்டும்.

ஆணையம் அமைப்பதை கர்நாடகா தொடர்ந்து  எதிர்த்து வந்திருக்கிறது. எனவே மத்திய அரசின் இந்த முடிவு கர்நாடகவுக்கு  சாதகமானது என்பதில் என்ன சந்தேகம்?

மத்திய அரசை மீறி செயல்பட முடியுமா இந்த ஆணையத்தால்?

தமிழர்களை போராட்ட களத்திலேயே  வைத்திருக்க விரும்புகிறது மத்திய  அரசு?