20 தமிழர்களை என்கவுண்டர் செய்த சந்திரபாபு நாயுடு – சி.பி.ஐ. விசாரணை வந்தால் மட்டுமே உண்மை வெளிவரும்.

Share
               அப்பாவி கூலித் தொழிலாளர்கள்  20 பேரை ஆந்திர மாநில போலீசார் செம்மரக் கடத்தல் காரர்கள் என்று குற்றம் சுமத்தி சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். .
                துப்பாக்கி குண்டுகளோடு வெட்டுக் காயங்களும் இறந்தவர்கள் உடலில் இருந்ததால் உடற்கூறு ஆய்வை இரண்டாம் முறை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவுள்ளதால் அதை உத்தரவிடகோரி ஆந்திர உயர்நீதி  மன்றத்தில் மனுப்போட அவகாசம் கொடுத்து வழக்கு அடுத்த வாரம் தள்ளி வைக்கப் பட்டுள்ளது.
                ஆந்திர பஸ்கள முடக்கம். பல ஊர்களில் ஆர்ப்பாட்டம் என்று தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்கள் வலுத்துள்ளன.
               இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 111 போலி என்கவுன்டர்கள் நடப்பதாக தகவல்கள் .  12  பேர் மணிப்பூரில் கொல்ல பட்ட போது  உச்ச நீதி மன்றம் நீதிபதி ஹெக்டே மூலம் அறிக்கை ஒன்றைப் பெற்று  துப்பாக்கி சூடு நடத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக விளக்கமாக எடுத்துக் கூறினார்கள்.
                இதற்கிடையில் ஆந்திர மாநில எதிர்க் கட்சிகளே நாயுடு அரசு மீதி வெளிப்படையாக இது ஜகன் ரெட்டி மீதான தாக்குதல் என்று குற்றம் சுமத்தி இருப்பதுடன் இந்தக் கொலைகளை செய்யச் சொன்னதே சந்திரபாபு நாயுடுதான் என்றும் சொல்கிறார்கள்.
               இறந்தவர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் எதுவும் தர மாட்டோம் என்று ஆந்திர அமைச்சர்கள்  கூறுகிறார்கள்.
             அ இஅ தி மு க சார்பில் மூன்று லட்சம் தி மு க சார்பில் ஒரு லட்சம் தேமுதிக சார்பில் ஐம்பதாயிரம்  என்று தமிழகத்தில் நிதி குவியும்போது  ஆந்திர அரசு நிவாரணம்  எதுவும் தர  மாட்டோம் என்று அறிவித்து இருக்கிறது.
              மத்திய அரசு தலையிட்டு இதில் நியாயமான விசாரணை நடை பெற்று உண்மைக் குற்றவாளிகள் தடிக்கப் பட  வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும்.
               
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

This website uses cookies.