பாகிஸ்தான் இந்து அகதிகளுக்கு தரும் சலுகைகளை ஈழ அகதிகளுக்கு மோடி அரசு தருமா?

Share

பாகிஸ்தான்,  வங்காளதேசம் , ஆப்கானிஸ்தான் போன்ற  நாடுகளில் இருந்து இந்தியாவில் அகதிகளாக தங்கியிருக்கும் இந்து சீக்கிய அகதிகளின் எண்ணிக்கை சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேல்.

நீண்ட கால விசா என்ற அடிப்படையில் தங்கியிருக்கும் இவர்களுக்கு வங்கிக்கணக்குகள் துவங்கவும் வருமான வரி அட்டை ,ஆதார் அட்டை பெறவும் சிறப்பு சலுகைகளை அளிக்க மோடி  அரசு திட்டமிட்டு இருக்கிறது.

குடியுரிமை  பெற ரூபாய் 15000 லிருந்து ரூபாய்  100  ஆக   கட்டணத்தை குறைக்கும் திட்டமும் இருக்கிறது.    ஏறத்தாழ 400 குடியிருப்புகள் வரை பல மாநிலங்களில் இருக்கின்றன.

வீடுகள் வாங்க, சுய தொழில் தொடங்க  வேலையில் அமர என்று பல திட்டங்களை மோடி அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் சுமார் இரண்டு லட்சம் இலங்கை அகதிகள் வாழ்ந்து வருகிறார்கள்.       சுமார்  30  ஆண்டுகளுக்கு மேலாக குடியுரிமை இல்லாமல் ‘ ஈழ ஏதிலியர் மறுவாழ்வு மையம் ‘ என்ற பெயரில் பல கொடுமைகளுக்கு ஆளாகி வாழ்ந்து வருகிறார்கள்.

சமீபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சி ஈழ அகதிகளின் சீரழிந்த வாழ்க்கையை படம் பிடித்து காட்டியபோது கலங்காதவர்கள் இருக்க முடியாது.

சிங்களனின் கைகளில் சிக்கி மாண்டது போதாது என்று தமிழனின் கைகளிலும் சிக்கி மாயவேண்டுமா என்று அவர்கள் கதறுவதை பார்க்க சகிக்க வில்லை.

ஈவிரக்க மில்லாத ஒரு தமிழ் அதிகாரியின் கொடுமையால் மின் கம்பத்தை தொட்டு தற்கொலை செய்த அகதியின் குரல் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.

என்ன செய்வது.?   இந்திய அரசின் கைகளில் அதிகாரம் குவிந்து கிடக்கிறது.    மாநில அரசு தன் அதிகாரத்துக்கு உட்பட்டு செய்ய வேண்டிய சலுகைகளை தந்தால் என்ன கெட்டு விடும்?

ஐக்கிய நாடுகளின் அகதிகள் மறுவாழ்வு திட்டத்தில் இந்தியா சேராதது ஏன் ?

ஐரோப்பிய நாடுகள் அகதிகளை அரவணைத்துக் கொள்ளும்போது அடிமைப்பட்டு கிடந்த இந்தியா அதை மறுப்பதேன் ?

அகதிகளில் இந்துக்கள் என்றும் தமிழர்கள் என்றும் இந்திய அரசு பேதம் காட்டாது என்று நம்புவோம்?????!!!!

 

 

This website uses cookies.