திருக்குறளை கற்பிக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டிய அவலநிலை உள்ளதே???

Share

திருக்குறளை 6  ம்  வகுப்பிலிருந்து   12  ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் சேர்க்க உயர்நீதிமன்ற  நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத் தக்கது.

90     மொழிகளில் ஆக்கம் செய்யப் பட்டு உலகப் பொதுமறையாக ஏற்கத் தகுந்த நூலான திருக்குறளுக்கு தமிழ்நாடு செய்யும் மரியாதை இப்போதுதான் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி பள்ளிகளில் பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவிடவேண்டிய நிலையில்  இருக்கிறது .

ஒழுக்கம் போற்றப்படும் சமுதாயத்தை உருவாக்க குறள்  மிகச் சிறந்த கருவி.     சமுதாய ஒழுக்கம் குறைந்ததால் தான் நல்ல அரசு உருவாவதிலும் சிக்கல் வருகிறது.

திருக்குறளை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

வானொலியில்  குறளமுதம் என்ற தலைப்பில் ஓரிரு நிமிடத்தில் சம்பிரதாயமாக ஒப்பிப்பார்கள்.        ஒரு  குறளை சொல்லி அதன் பொருளை ஓரிரு வாக்கியத்தில் சொல்லுவதன் மூலம்  நாங்களும் திருக்குறளை சொல்லுகிறோமே என்று  தமிழ் ஆர்வலர்களை திருப்திப் படுத்தும் நோக்கம்தான் வெளிபடுகிறதே தவிர   அதன் பொருள் மக்கள் மனதில் பதியும் வண்ணம் நிகழ்ச்சிகளை வடிவமைக்க வேண்டும் என்ற உணர்வு இல்லை.

காதைக்கிழிக்கும் ,  பொருள் புரியாத இசை நிகழ்ச்சிகளை நாள் பூராவும்  ஒலி பரப்பும் இவர்கள்  திருக்குறள் விளக்கவுரை சொல்லவோ  திருக்குறள் செய்திகளை  நாடக வடிவில் அல்லது இசை வடிவில் கேட்போர் மனதில் பொருள் நிலைக்கும் வண்ணம் நிகழ்ச்சிகளை வடிவமைக்க கவனம் செலுத்தாதது ஏன் என்பதுதான் நம் கேள்வி???

குறைந்தது    ஒருமணிநேரம்  திருக்குறளுக்கு  பொருள் விளக்கும் நிகழ்ச்சிகளை வானொலி நிலையங்கள்   ஒதுக்குவதே நியாயம் !!!!

This website uses cookies.