ஜெயலலிதா அரசாள தமிழர்கள் அடிமைகள் ஆக வேண்டுமா? ஜெயலலிதாவை வீழ்த்த யாரால் முடியுமோ அவர்களுக்கே வாக்களிப்போம் ??!!!

Share

ஆட்சியில் நன்மைகள் தீமைகள் எல்லாம் எல்லா ஆட்சியிலும் இருக்கும்தான்.

ஆனால் எந்த ஆட்சியிலும் மக்கள் அடிமைகளைப் போல் நடத்தப் படுவது இல்லை.

ஜனநாயகத்தில் ஒரு மகாராணியைப்போல் ஜெயலலிதா செயல்படுவதை மானமுள்ள எந்த மனிதனும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

லஞ்சத்தை கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை தரப் படுத்தி எல்லோருக்கும் ஏதாவது கிடைக்கும்படி ஏற்பாடு செய்வதில் வெற்றிகரமான வழிமுறையை நிலைப்படுத்தி விட்டார் ஜெயலலிதா.

அதனால் தான் அவர்கள் அவருக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்.

அடித்தால் அழும் உரிமை கூட அங்கே யாருக்கும் கிடையாது.

மீண்டும் அழைத்து ஏதாவது கொடுப்பார் என்ற நம்பிக்கையில்  அடிபட்ட எல்லாருமே காத்திருக்கிறார்கள்.

இப்படி ஒரு அடிமை சமூகத்தை உருவாக்கவா பெரியாரும் அண்ணாவும் பாடுபட்டார்கள். ?

லஞ்சம புரையோடிபோயிருப்பதைவிட இந்த அடிமை மனநிலை நிலைப்பட்டு விட்டது தான் மிகவும் ஆபத்தானது.

பாரதி  பாடும்போது என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் இந்த அடிமையின் மோகம் என்றுதான் பாடினான்.

சுதந்திர தாகம் கூட தணிந்தால் போதும் ஆனால் அடிமை மோகம் மட்டும் முற்றாக மடிய வேண்டும்.

ஜெயலலிதா கபட நாடகம் ஆடுகிறார்.   தவ வாழ்வு வாழ்கிறேன் என்று மனதார பொய் சொல்கிறார்.

எது தவ வாழ்வு.?

கோடி கோடியாய் சொத்துகளை சேர்த்து வைத்துக்கொண்டு எல்லாரையும் அடிமைபடுத்தி சொகுசாக வாழ்வதற்குப் பெயர் தவ வாழ்வா?

வள்ளுவர் இவரை பற்றிதான் சொல்லுவது போல் ,

”     நெஞ்சில்   துறவார் துறந்தார் போல் வஞ்சித்து

வாழ்வாரின்   வன்கணார் இல் ”       என்று பாடி வைத்தார் போல.

நல்லாட்சி தந்தாரோ இல்லையோ தமிழர்களுக்கு அடிமைகள் என்ற பட்டத்தை நன்றாகவே கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா??!

மீண்டும் வந்தால்  தமிழர்கள் தன்மானத்துடன் வாழ்வது  இயலாது.

இவருடைய ‘ style of  functioning ‘    செயல்படும் முறை , நமக்கு ஒவ்வாது.

பிரசாரத்தின் போது ஏழு உயிர்களை காவு வாங்கிய மகாராணிக்கு நிரந்தர ஓய்வு கொடுப்போம்.?!!

This website uses cookies.