ஜல்லிக்கட்டை எதிர்த்த சக்திகள் பூரம் திருவிழாவில் யானைகளை கொடுமை செய்வதை எதிர்க்காதது ஏன்?

Share

ஏறு தழுவுதல் என்ற ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று புறப்பட்ட மிருக வதை எதிர்ப்பாளர்களின் உண்மையான நோக்கம் தமிழர்களின் கலாச்சாரத்தை ஒழிப்பதுதான் என்று எல்லாருக்கும் இப்போது புரிந்து விட்டது.

குதிரைப்பந்தயங்கள் தடுக்கப்  படவில்லை.   ஒட்டக பந்தயங்கள் தடுக்கப்படவில்லை. நாய்க்கண்காட்சிகள் தொடர்கின்றன.

கேரளத்தில் திருச்சூர் பூரம்  திருவிழாவில் கட்சி மத வேறுபாடில்லாமல் திருவிழாவை நடத்தும் பொறுப்பை இரண்டு தனியார் தேவஸ்தான அமைப்புகள்- பரமேக்காவு ,திருவாம்பாடி – பாரம்பரிய முறைப்படி நடத்த வேண்டும் எல்லாரும் வேண்டுகோள் வைத்திருக்கிறா ர்கள்.

36  மணி நேரம் நடக்கும் இந்த  திருவிழாவில் 79  அலங்கரிக்கப் பட்ட யானைகள் அணிவகுக்கப்பட்டு காதைப் பிளக்கும் செண்டை மேளங்களுடன் பிரமாண்டமான வாணவேடிக்கைகளுடன்  நிறைவுபெறும் .

இந்த திருவிழாவில் யானைகள் துன்புறுத்தப் படுகின்றன என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து அதை ஆய்வு செய்ய இந்திய விலங்குகள் நல வாரியத்தின் அதிகாரிகள் அறுவர் கேரள அரசின் அதிகாரிகளால் தடுக்கப் பட்டிருக்கிறார்கள்.       மாநில விலங்குகள் துறை , வன இலாகா மாவட்ட ஆட்சியர்  காவல் அதிகாரிகள் அனைவரும் தடுத்திருக்கிறார்கள்.

எல்லா யானைகளின் கால்களிலும் இரும்பு சங்கிலிகள் பிணைக்கப் பட்டிருக்கும்.    அதுவும் முன் இரண்டு கால்கள் பின் இரண்டு கால்கள் எல்லாவற்றிலும் சங்கிலிகளால் பிணைக்கப்  படும்போது அந்த யானைகள் படும் துயரத்தை அனுமானிக்கவே முடியாது.

எது எப்படியிருந்தாலும் அதிகாரிகள் ஆய்வு செய்வதை மறுப்பதை எப்படி எடுத்துக் கொள்வது?    தவறு நடப்பதை மறைக்கத்தானே ?

இன்னமும் தனியார் ஆதிக்கம் கோவில்களில் கொலோச்சுவதை தமிழகம்  தவிர இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் பார்க்க முடியும்.

கேரள அதிகாரிகளின் நடத்தை உச்ச நீதிமன்றம் அளித்த தாக்கீதுகளுக்கும் எதிரானது.

பார்ப்பன அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கும் மேலானது என்பதை சொல்லாமல் சொல்லி

இருக்கிறார்கள். 

 

This website uses cookies.