சட்டிஸ்கரில் ஒரு லட்சம் நட்டத்திற்கு 81 ரூபாய் நிவாரணம் ??? கோவையில் மானியம் கிடைக்காமல் தற்கொலை செய்த விவசாயி???!!!

Share

சட்டிஸ்கர் மாநிலம் சுர்கூஜா மாவட்டத்தில் ஒரு பழங்குடி இன  விவசாயி  நான்கு ஏக்கர் நிலத்தில் வெங்காயம்,   தானியம்,   எண்ணெய்வித்துக்கள்  சாகுபடி செய்திருந்தார்.

ஒருநாள் பருவம் தவறி பெய்த மழையாலும் சூறாவளிக்காற்று வீசியதாலும்  அனைத்து பயிர்களும் நாசமாகிவிட்டன.      வங்கிகளில் ரூபாய் ஒன்னேகால் லட்சம் கடன் வாங்கியிருந்தார் அந்த விவசாயி.   அரசு அதிகாரிகள் கிராமத்தில் முகாமிட்டு பாதிக்கப் பட்ட இடத்தை பார்க்காமலேயே அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பினர்.

கொஞ்ச நாள் கழித்து விவசாயிக்கு கிடைத்தது ரூபாய்   81 க்கான  காசோலை. இதேபோல் அந்த ஊரில் பலருக்கும் ரூபாய் நூறிலிருந்து ஆயிரம் வரை நிவாரணம் கிடைத்துள்ளது.

கேட்டால் எல்லாம் விதிமுறைகளின்படியே கணக்கிடப்பட்டது .   நாங்கள் வேறு ஒன்றும் செய்ய முடியாது என்று தாசில்தார் குழு சாதிக்கிறது.

கோவை வேப்பம்பள்ளம புதூர்  கிராமத்தில் ஒரு விவசாயி தனது ஆறு ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து  ரூபாய் 70 லட்சம்  வங்கிக்கடன் வாங்கி தனது நிலத்தில் பசுமை வீடு கட்டுகிறார்.    அதற்கு 50 % மானியம் எதிர்பார்த்திருக்கிறார் அந்த விவசாயி.    மாநியம் கிடைக்காதது மட்டுமல்ல வங்கி அதிகாரிகள் வீட்டுக்கு வந்து மிரட்டியும் சென்றிருக்கிறார்கள்.  ராமசாமி என்ற அந்த விவசாயி  அன்றே பூச்சி   மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.    கடன் தந்த மன அழுத்தம் உயிரை குடித்து விட்டது.

மோடி அரசு அறிவித்த காப்பீடு திட்டம் எப்போது அமுலுக்கு வருவது எப்போது விவசாயி

நிம்மதியாக வாழ்வது.???!!!!

 

This website uses cookies.