கொள்ளையடித்த பணம் ஜனநாயகத்தை குதறிக் கொண்டிருக்கிறது???!!! தேர்தல் ஆணையம் உடந்தை???!!!

Share

நியாயமாகத்தான் தேர்தல் நடந்தது என்று நிரூபிக்க தேர்தல் ஆணையம் முயன்று வருகிறது.

ஆனால் கொள்ளையடித்த பணம் ஆங்காங்கே ஓட்டுக்கு ஐநூறு ஆயிரம்  இரண்டாயிரம் என்று விளையாடிகொண்டிருக்கிறது .

நூறு  கோடி  கைப்பற்றினோம் பிடித்தோம் என்று செய்திகள் உண்டுதான்.

பிறகு எங்கிருந்து வந்தது இந்தப்பணம் ?

அ தி மு க காரர்கள் புதுப் புது வழிகளை கண்டுபிடித்து ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள்.

இதையெல்லாம் மீறி வாக்காளர்கள் மாற்றத்துக்கு வாக்களிப்பார்களா ?

கொடுமை என்னவென்றால் எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே இந்த பண விநியோகம் தங்கு தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது.

பாராளுமன்றத் தேர்தலிலும் இதுதான் நடந்தது.      ஒன்றுமே நடக்காதது போல்  எல்லாருமே மௌனித்துப் போகவில்லையா?

வாங்கிப் பழக்கப் பட்ட வாக்காளர்கள் ஏன் பணம் இன்னும் வரவில்லை  என்று கேட்கும்  அளவுக்கு ஜனநாயகம் புரையோடிப்  போயிருக்கிறது.

என்ன செய்து இந்த நிலைமையை மாற்றுவது  என்று தமிழர்கள் சிந்தித்து திட்டமிட வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

கொடி இல்லை  தோரணம் இல்லை  போஸ்டர் இல்லை பூத் ஸ்லிப் கூட இல்லை ஆனாலும் கோடிக்கணக்கில் செலவு என்றால் அதன் பொருள் என்ன??   ஓட்டுக்கு பணம்தானே?

உட்கட்சி ஜனநாயகம் சட்டப்படி பாதுகாக்கப் பட்டு தேர்தல் நடந்து கட்சிப்  பிரதிநிதிகள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் பிரதிநிதிகள் கொண்ட விகிதாசார பிரதிநிதித்துவ  தேர்தல் மட்டுமே இந்த ஊழல் புரையிலிருந்து ஜனநாயகத்தை காத்திடமுடியும் என்று தோன்றுகிறது.

வந்து கொண்டிருக்கும் தேர்தல் கணிப்புகளில் அ தி  மு க வெற்றி பெறும் தொகுதிகளில் எல்லாம் மூன்றாம் இடத்தில் விஜயகாந்த் அணி இருக்கும்.    தி மு க ஓட்டையும் விஜயகாந்த் அணி ஓட்டையும் சேர்த்தால் அ தி மு க தோல்வியுறும் என்ற நிலை தான் தெரிகிறது.

ஆக  அ தி  மு க  எதிர்ப்பு ஓட்டை பிரிக்க முளைத்ததுதான் வைகோ உருவாக்கிய நால்வர் அணி என்பதும் அதில் ஒட்டிகொண்ட விஜயகாந்துக்கும் வாசனுக்கும் அதில் பங்கு உண்டு  என்பதும் தெளிவாகிறது.       1500   கோடி தன் வேலையை  கன  கச்சிதமாக பார்த்திருக்கிறது.

இதையெல்லாம் மீறி ஆட்சி மாற்றம் நடந்தால் தமிழர்களை வெல்ல யாராலும் முடியாது என்ற நம்பிக்கை மிச்சமிருக்கும்.

மீண்டும் ஜெயா ஆட்சி என்றால்???~!!!!!!

 

 

 

This website uses cookies.