குழப்பத்தில் தொடங்கிய ஜெயலலிதா ஆட்சி??!!! இவரை நம்பியா தமிழகம்??!!!

Share

ஒருவழியாக ஜெயலலிதா இன்று முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

பகலில் 29  பேர் கொண்ட அமைச்சரவையாக இருந்தது  மாலையில் மேலும் நான்கு அமைச்சர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டு  33  பேர் கொண்ட அமைச்சரவையாக மாறியது.

எல்லாரும் தனித்தனியாக உறுதிமொழி ஏற்றுக் கொள்வதுதான் முறை.    ஆனால் பதினான்கு பேர் கொண்ட இரண்டு குழுக்களாக கோரஸ் பாடி பதவி ஏற்றுக் கொண்டார்கள்.

தி மு க பொருளாளர் ஸ்டாலின் முன்னாள் துணை முதல்வர்.     அவருக்கென ப்ரோடோகால் என்ற முறைப்படி அவருக்கு முன் வரிசையில் இடம் கொடுக்காமல் பின்னால் அமரவைத்து அவமானப் படுத்தினார்கள்.

வழக்கம்போல் எல்லா அமைச்சர்களும்   ஜெயலலிதா முன்பு  குனிந்து வளைந்து தமிழர் தன் மானத்தை வானமேற்றினார்கள்.

எல்லாரும் வீட்டிற்கு போவதுற்குள்ளாகவே அறிவிப்பு வருகிறது.         மேலும் நான்கு பேர் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டு விரிவாக்கம் முதல் நாளிலேயே செய்யப் படுகிறது.

அதிகாரம் இருக்கிறது.    சட்டப்படி சரி என்பதெல்லாம் உண்மைதான்.     ஆனால் எடுத்தேன் கவிழ்த்தேன்  என்று  செயல்படுகிற ஜெயலலிதா மாறவேயில்லையே.

தன்னைப் பற்றி ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.   அதுதான் அவர் எப்போது என்ன செய்வார் என்று யாருக்கும் அனுமானிக்க முடியாது என்பது.

அவர் எது செய்தாலும் மற்றவர்கள் எந்த கேள்வியும் கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அப்படித்தான் சென்ற முறை 24   முறை அமைச்சரவை மாற்றங்களை செய்த  போது யாரும் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.    கேட்கவும் முடியாது.

ஒன்று தெரிகிறது.     முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லை என்று யாரோ சுட்டி காட்டினார்களாம்.    இல்லை  என்பது அப்போதுதான் அவருக்கு உதயமானதா?         அதை உணராமலா பட்டியலை தயாரித்தார்.      வாஸ்த்து என்று ஒன்றை காரணமாக பத்திரிகைகள் எழுதும்.    எல்லாரும் ஆமாம் ஆமாம் என்பார்கள்.

ஐந்து அறிவிப்புகளில் கைஎழுத்திட்டிருகிறார்.    மதுவிலக்கை நோக்கி 500 கடைகள் மூடல்.   இரண்டு மணி நேரம் கடைகள் கூடுதலாக மூடல்.     வீடுகளுக்கு   100  யூனிட் மின்சாரம் கட்டணமில்லை.   நெசவாளர்களுக்கும்  விசைத்தறி உரிமையாளர்களுக்கும் கூடுதல் மின்சாரம் இலவசம்.    சிறு குறு நடுத்தர விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் தள்ளுபடி.       நல்ல தொடக்கம் என்றே எடுத்துக் கொள்வோம்.     ஏமாற்றும் நோக்கம் இல்லாமல் இருந்தால் சரி.

எல்லாவற்றையும் விட எவராலும்  ஏற்றுகொள்ள முடியாதது அவரது செயலாற்றும் விதம.    அதாவது  style of  functioning.       எல்லாரையும் தனது அடிமைகளாக பாவிக்கும் குணம்.           அது மாற வேண்டும்.

இன்று நடந்தது அவர் மாறவேயில்லை என்பதையே காட்டுகிறது.     தானாக மாற வில்லை என்றால் காலம் மாற்றிக் காட்டும் என்பது மட்டும் உறுதி.

This website uses cookies.