உச்சநீதிமன்றம் செய்த அநியாயம்- மருத்துவப் படிப்பில் நுழைவுத்தேர்வு???!!!

Share

இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியான கல்விக் கொள்கை இல்லை.

2009  ல் மருத்துவக் கவுன்சில் திட்டமிட்ட மருத்துவம்,பொறியியல் , கால்நடை மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு என்ற திட்டம் செல்லாதது என்று  2013 ல் அப்போதைய தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர தீர்ப்பளித்தார் .   அவருடன் இருந்த தவே என்ற நீதிபதி தேர்வுக்கு ஆதரவாகவும் விக்ரம்சித் சென் என்பவர் எதிராகவும் தீர்ப்பளித்ததால்  கபீர் தீர்ப்பு நிலைத்தது. அதுவும் தான் ஓய்வு பெறும் நாளுக்கு ஒரு நாள் முன்பு இந்த தீர்ப்பை அளித்தார்.

அதே தவே  என்ற  நீதிபதி மற்றும் நால்வர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இப்போது  தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்று தீர்ப்பு சொல்லியிருக்கிறது. .

தமிழ்நாட்டில் ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் அறுவர் கொண்ட குழு அமைத்து அவர்களின் பரிந்துரையின் பேரில்தான் 06.12.2006  ல் தமிழக சட்ட மன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

கிராமப் புற மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கும் நோக்கில் இந்த தேர்வு செயல்படும் என்பதில் சந்தேகமேயில்லை.

உயர்சாதி ஆதிக்கம்  உயர் கல்விகளில் நீடிக்க வகை  செய்யும் பலவித தந்திரங்களில் இதுவும் ஒன்றாகத்தான் பார்க்கப்படும்.

ஒரே கல்வி முறை இல்லாத போது ஒரே தேர்வு முறை மட்டும் எப்படி நியாயமாக நடக்க முடியும்.

தமிழ் நாட்டை எப்படி இந்த தீர்ப்பு கட்டுப் படுத்தும் என்பதும் கேள்விக்குறி.

மொத்தத்தில்   குழப்பங்களை  தீர்த்து வைக்க வேண்டிய உச்ச நீதி மன்றம் இந்த தீர்ப்பின் மூலம் பல குழப்பங்களை உருவாக்கி  இருக்கிறது.

This website uses cookies.