இரண்டு தொகுதிகளில் மட்டும் தேர்தலை ஒத்தி வைத்து கண்ணா மூச்சி காட்டும் தேர்தல் ஆணையம்??!!

Share

அரவாக்குறிச்சியிலும்  தஞ்சாவூரிலும் மட்டுமே ஓட்டுக்கு பணம்  கொடுத்தது போல் தோன்றுகிறது தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை.     இங்கு மட்டுமே  தேர்தல் ஒத்திவைக்கப் படுகிறது.

எல்லாருக்கும் தெரிகிறது எல்லா தொகுதிகளிலும் பணம் புகுந்து  விளையாடியிருக்கிறது என்று.

மற்ற எல்லா தொகுதிகளிலும்  தேர்தல் நடக்க அங்கு மட்டும் ஏன் தள்ளி வைக்கப் பட வேண்டும்?

பண விநியோகத்தை தங்களால் கட்டுபடுத்த முடியவில்லை என்று நாணயமாக ஆணையம் ஒத்துக் கொள்ளலாம்.

தேவைபட்டால் தேர்தலையே கூட ஒத்தி வைத்து விட்டு  பண  விநியோகம் தவிர்த்த தேர்தலை நடத்த முயற்சித் திருக்கலாம்.

நடவடிக்கை எடுத்ததன் மூலம் தேர்தல் நியாயமாக நடந்தது என்று நாளை யாரும் சொல்ல மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

முடிவு என்னவாக இருந்தாலும்  ,

அதில்

பணத்தின் கறையை  அழிக்கவே முடியாது.!!!!

 

This website uses cookies.