இரண்டு தலித் குழந்தைகள் உயிருடன் எரிக்கப் பட்டது பற்றி கேட்டதற்கு நாய்கள் மீது கல்லெரிந்தால்கூட அரசு பொறுப்பேற்க வேண்டுமா எனக்கேட்ட மத்திய ராணுவ அமைச்சர் வி கே சிங் – ஒரு கண்டனம் கூட இல்லாமல் நீடிப்பது எப்படி?

Share
             காஜியாபாதில்  இரண்டு தலித் குழந்தைகள் உயிருடன் எரிக்கப் பட்டர்கள்.
              அதற்கு விளக்கம் கூற வந்த வி கே சிங் அது இரண்டு குடும்பங்களுக்கு இடையே நடந்த பகைமையின் விளைவு என்று கூறிவிட்டு நாயின் மீது கல்லெறிந்தால் கூட அரசு பொறுப்பேற்க வேண்டுமா என்று கேட்டது நாடு தழுவிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
                          சம்பவம் கொடுமையானது என்பது உண்மை.    அதற்கான காரணம் எ துவாக இருந்தாலும் அது சமூகத்தின் நோயின் அடையாளம்.   தண்டிக்கப் பட வேண்டிய குற்றம். அதைப் போக்க கடைபிடிக்க வேண்டிய மருத்துவம் என்ன என்பதை விவாதித்தால் அது வரவேற்கலாம்.
                    ஆனால் பிரச்சினையின் தன்மையை உணராமல் கொலையை நாயின் மீது கல்லெறிவதுடன் ஒப்பிட்ட ஒருவர் நாட்டின் ராணுவ அமைச்சர் என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத அச்சம் கலந்த திகில் உணர்வு தான் உண்டாகிறது.

                     இத்தகைய மனோநிலை கொண்ட ஒருவர் கையில் இந்த நாட்டின் பாதுகாப்பு உள்ளது நல்லதா?       தவறிப்போய் சொல்வதற்கு இது ஒன்றும் சாதாரணமான பிரச்சினை இல்லையே?    
                    அவரது உள்மனதில் உள்ளதுதான் வார்த்தைகளாக வெளி வந்திருப்பதுதானே உண்மை.
                   அவரது   விளக்கம்  யாரையும் அமைதிப்படுத்தாது.  ராஜ்நாத் சிங்  சமாதானம் சொல்லி பிரச்சினை தீர்ந்து விட்டது என்கிறார்.
              ஏற்கனேவே மோடி குஜராத் கோத்ரா சம்பவத்தின்போது தன் மனம் வருந்தியதாக சொல்லிவிட்டு காரில் நாய்குட்டி அடிபட்டால் மனம் வருந்த மாட்டோமோ  என்று கேட்டார்.   அவரது வழியில் இப்பொது வி கே சிங் தலித் குழந்தைகளின் மரணம் நாய்கள் மீது கல்லெரிவதற்கு சமமானது என்று ஒப்பிட்டு பேசியிருக்கிறார்.
                  மக்கள் இதையும் மறந்து விடுவார்கள் என்பது அவர்களின் நம்பிக்கை.
               மக்கள் இவர்களின் குற்றங்களை எண்ணிக்கொண்டு இருகிறார்கள் என்பதையும் நேரம் வரும்போது தண்டிப்பார்கள் என்பதையும் வரலாறு சொல்லும். 

This website uses cookies.