அண்ணா கொண்டுவந்து அமுலில் இருக்கிற சுயமரியாதை திருமண முறைகளை செல்லாதது என அறிவிக்க கோரிய வழக்கு தள்ளுபடி??!!! ஆரிய ஆதிக்க திமிர் அடங்க மறுக்கிறது!!!

Share

47 ஆண்டுகளாக தமிழ் நாட்டில் மட்டுமே சுயமரியாதை திருமண முறை சட்டப்படி அங்கீகரிக்க பட்டிருக்கிறது . அறிஞர் அண்ணா முதல்வராக பதவியேற்றவுடன் 1968 ல் இந்து திருமண சட்டத்தில் திருத்தம் செய்து சுயமரியாதை திருமணங்களை செல்லும் என்று அறிவித்தார்.

நாட்டில் எங்குமே இல்லாத அளவில் தமிழ் நாட்டில் மட்டும் இந்த சீர்திருத்தம் அமுலில் இருப்பது பார்ப்பனர்களை உறுத்திக்கொண்டே இருந்திருக்கிறது. அதனால்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் . அசுவத்தாமன் என்ற வக்கீல் மூலம் ஒரு பொது நல வழக்கு தொடுத்து ‘சப்தபதி போன்ற முக்கியமான சடங்குகள் இல்லாமல் திருமணம் செய்வதை ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும் ஒரு அரசியல் கட்சியின் சித்தாந்தத்தை புகுத்த முடியாது என்றும் வாதிட்டார்கள்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சிவஞானம் கொண்ட அமர்வு இந்து மதமே பன்முகத்தன்மையை கொண்டது என்றும் அது காலம் காலமாக பலவிதமான சம்பிரதாயங்களை உள்ளடக்கிய திருமண முறைகளை ஏற்றுக் கொண்டு வந்திருக்கிறது என்றும் எனவே அவரது கோரிக்கை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது.

மனுப் போட்டவருக்கு கடுமையான அபராதம் விதித்து இருக்க வேண்டும்.
தந்தை பெரியார் பார்ப்பனர் முறை திருமணம் பற்றி மிக விளக்கமாக பேசியும் எழுதியும் வந்தார். சூத்திரர்களுக்கு திருமணம் செய்யும் உரிமை கிடையாது என்றும் மீறி செய்து கொண்டால் அவர்கள் வைப்பாட்டிகளாக இருக்கலாமே தவிர மனைவியாக இருக்க முடியாது என்று பார்ப்பனர் எழுதி வைத்திருந்ததை நிரூபித்தார்.
புரியாத மொழியில் சுலோகங்களை சொல்லி என்ன சொல்கிறார்கள் என்றே புரிய வைக்காமல் திருமணம் செய்யும் உரிமைக்காக தற்காலிகமாக பூணூல் அணிவித்து திருமணம் செய்வித்து யாரையும் சிந்திக்க விடாமல் தங்களது அடிமைகளாக வைத்திருந்த முறையை மாற்றி அண்ணா தமிழர்களை தன்மானமுள்ள வர்களாக மாற்றினார்.

இந்தியா முழுமைக்கும் இது போன்ற சட்டங்களை அமுல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசு மெளனமாக இருப்பதால் பார்ப்பனர்களுக்கு இது உறுத்தலாக இருக்க வேண்டும். எனவேதான் இந்த வழக்கு.
தமிழ் முறைத் திருமணங்களில் இன்னும் திருத்தப் பட வேண்டியது ஏராளம். அதையும் ஒழிக்க வேண்டும் என்று இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் புறப்பட்டிருக் கிறார்களே அவர்களுக்கு இருக்கும் தைரியத்தை என்னவென்று சொல்வது. ?

ஜெயலலிதா தலைமைப் பொறுப்பில் இருப்பதால் இந்த முயற்சியா? எந்த மடம் இதன் பின்னணியில் இருக்கிறது. ?
சுயமரியாதைத் திருமண முறையை அகில இந்திய ரீதியில் இந்து திருமண சட்டத்தில் , தமிழகத்தில் அண்ணா காட்டிய வழியில் ,தகுந்த திருத்தம் கொண்டுவந்து அமுல் படுத்தினால்தான் இவர்கள் கொட்டம் அடங்கும்.

This website uses cookies.