இசைக்கருவிகளின் கண்காட்சிக் கூடம் சென்னையிலிருந்து டெல்லிக்கு மாற்றப்படுவது ஏன்?

1956 சென்னையில் நிறுவப்பட்ட இசைக்கருவிகளின் கண்காட்சிக் கூடம் இப்போது சங்கீத் வாத்யாலயா என்ற பெயரில் அண்ணா சாலை டிவிஸ் பேருந்து நிறுத்தம் அருகே இயங்கி வருகிறது.

இது மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இருந்து வரும் கைவினைப் பொருட்கள் ஆணையர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் செயல் பட்டு வருகிறது.

அதில் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வில்யாழ், மகரயாழ் , மச்சயாழ், பேரியாழ், செங்கோட்டு யாழ், போன்றனவும், வீணை , தம்புரா, மிருதங்கம், தவில் , நாகசுரம், தபேலா, ஆகிய இசைக்கருவிகளும் வைக்கப்  பட்டுள்ளன. இசை மாணவர்களுக்கும் ஆய்வு செய்பவர்களுக்க்ம் இக்கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

இதை டெல்லி பிரகதி மைதானத்தில் நிறுவ தீர்மானித்ததின் காரணம் என்ன? இதைப்பற்றி மாநில அரசு என்ன கருத்து கொண்டிருக்கிறது என்பதும் தெரியவில்லை.

முரசொலி நாளிதழ் எழுதிய தலையங்கம் இந்த வஞ்சக நடவடிக்கையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.

சென்னையில் வேண்டாம் எல்லாம் டெல்லியில் தான் என்றால் மாநிலங்கள் எதற்கு என்றும் அது கேள்வி எழுப்பி இருக்கிறது.

பதில் சொல்லத்தான் யாரும் இல்லை?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here