கட்டவே முடியாத அணைக்கு திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது ஏன்?

megathathu
megathathu

மேகதாது அல்லது மெக்கேதாட்டு என்ற இடத்தில் காவிரி ஆற்றில் அணை கட்ட கர்நாடக அரசு அனுமதி கேட்டு அதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய நீர்வள குழுமம் 22.11.2018 ல்  அனுமதி அளித்துள்ளது.

இது பச்சை அயோக்கியத்தனம்.

காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை அதன் தொடர்சியான உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பு இரண்டும் அமுலில் இருக்கும் நிலையில்,

தமிழ்நாட்டு அரசுக்கு  காவிரியில் மேகதாதுவில் அணை கட்ட ஒப்புதல் இல்லை என்று அதன் சட்ட மன்றத்தில் 05.12.2014 , 27.03.2015  ஆகிய தேதிகளில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கின்ற நிலையில்  ,

மத்திய அரசிடம் கர்நாடக அரசு காவிரியில் இரண்டு  அணைகள் கட்ட அனுமதி  கேட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு  தொடுத்து அது நிலுவையில்  இருக்கும் நிலையில் ,

மத்திய நீர்வள குழுமம் கர்நாடகத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க   அனுமதியளிக்க  உரிமை இருக்கிறதா என்பதே கேள்விக்கு உரியது என்ற நிலையில் ,

மத்திய அரசின் முடிவை வேறு எப்படி  விமர்சிப்பது?

காவிரி நடுவர் மன்ற ஆணையத்திற்கும் நீர் வள குழுமத்திற்கும்  ஹுசைன் ஒருவரே தலைவர்.   ஏன் ஆணையத்திற்கு ஆறுமாதமாக தலைவர் நியமிக்காமல் இருக்கிறீர்கள்?

அவர் குழுமத்தின் தலைவராக அனுமதி அளிக்கிறார் அவரே தான் தான் ஆணையத்தின் தலைவராக இறுதி முடிவு எடுப்பேன் என்கிறார்.   ஏன் இந்த கேலிக்கூத்து?

தெரிந்தே செய்பவர்கள் எப்படி திருந்துவார்கள்?   கர்நாடகத்தில் வெற்றிபெற வாய்ப்பு தமிழ்நாட்டில் இல்லை என்பதுதான் மத்திய அரசின் இந்த பாரபட்ச முடிவுக்கு காரணம் .

சட்ட மன்ற தீர்மானம் பிரதமரை சந்திப்பது எல்லாம் பயன் தரும் என்று தோன்றவில்லை.

உச்ச நீதிமன்றம் ஒன்றே ஒரே நம்பிக்கை.

அதுவும் திட்ட அறிக்கைதானே தயாரிக்கிறார்கள் . அணை கட்டும் வேலையில் இறங்க வில்லையே பிறகு ஏன் ஆட்சேபிக்கிறீர்கள்  என்று கேட்டு விட்டால் நமக்கு போக்கிடம் இல்லை.   அப்படி கேட்குமா என்பது அமையும் அமர்வை பொறுத்து இருக்கிறது.

பொறுத்திருந்து  பார்ப்போம் ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here