Connect with us

தினகரனுக்கு ஆளுனரிடமும் குடியரசுத் தலைவரிடமும் நீதி கிடைக்குமா?

Latest News

தினகரனுக்கு ஆளுனரிடமும் குடியரசுத் தலைவரிடமும் நீதி கிடைக்குமா?

ஆளுநரும் குடியரசு தலைவரும் பா ஜ க வி ன் பிரதிநிதிகள்.       பா ஜ க வின் அரசியல் வியூகங் களுக்கு எதிராக இவர்கள்  எந்த முடிவையும் எடுப்பார்களா?

நடுநிலை யாக இருந்து எந்த முடிவையும்  எடுக்க வேண்டும் என்பது சட்ட பூர்வ நிலையாக இருக்கலாம்.    நடைமுறையில். ?

நீட் தொடர்பான பிரச்னையில் சட்ட மன்றத்தில் நிறைவேற்றப் பட்ட மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பப் பட்டது கிடைத்ததா அதற்கு ஒப்புதல் அல்லது நிராகரித்தல் உத்தரவு பிறப்பிக்கப் பட்டதா என்ற தகவல் இன்றளவும் கிடைக்க வில்லை.    இதுதான் பா ஜ க அரசியல் முகம்.

பத்தொன்பது உறுப்பினர்கள் ஆதரவு வாபஸ் என்பது அ தி மு க வின் உட்கட்சி பிரச்னை என்று எதை வைத்து ஆளுநர் கூறுகிறார் ?     அதையே அதிகாரபூர்வமான பதிலாக ஏன் கூறவில்லை. ?

கூறினால் அது நீதி மன்ற விசாரிப்புக்கு உள்ளாகும் என்பதினால்தானே.

முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று மனு கொடுத்த   பத்தொன்பது பேரையும் தகுதி இழப்பு செய்து தி மு க வின் இருபத்தொரு பேரையும் குட்கா பிரச்னையில் தகுதி இழப்பு செய்து போலியாக  எடப்பாடி பெரும்பான்மை பெறும் வரையிலும் ஆளுநர் காத்திருப்பாரா ?

பெரும்பான்மை இழந்து விட்ட எடப்பாடி அரசு ஒரு நிமிடம் கூட பதவியில் ஓட்டிகொண்டிருக்க உரிமை இல்லை.

நீதி மன்றமும் மக்கள் மன்றமுமே ஒரே வழி !

இன்னமும் மத்திய அரசை நோக்கி குற்றம் சாட்டவோ போராடவோ தினகரன் தயாராகவில்லை.

அவரது உதவியாளர்கள் சொல்வதெல்லாம் அவருக்கு இருக்கும் அச்சத்தை மட்டுமே வெளிக்காட்டும்.

ஓ  பி எஸ் -இ பி எஸ் இருவருமே பா ஜ க வின் கூலிகள் என்றால் நான் மட்டுமே அ தி மு க வின் மரியாதையை மீட்க முடியும் என்றால் வெளிப்படையாக மத்திய மோடி  அரசுக்கு எதிராக குரல் கொடுக்க ஏன் தாமதம்?

நீதி மன்றம் தலையிட வேண்டும் . மக்கள் கிளர்ந்து  எழுந்து போராட வேண்டும்.

இதற்கு மாறாக  குற்றம் இழைப்பவர்களே நீதி வழங்கு வார்கள் என்று எதிர் பார்த்து காத்திருப்பது ஒருபோதும் பயனளிக்காது .

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Latest News

To Top