இந்தியா மத சார்பற்ற , சோசியலிச நாடாக நீடிக்க வேண்டுமா ? வேண்டாமா?

பா. ஜ. க . அரசின் அடுத்த நகர்வு இந்திய அரசியல் சட்டத்தின் முகவுரையில் இருந்து மத சார்பற்ற , சோசியலிச அடைமொழிகளை நீக்குவது. 
     குடியரசு தின விளம்பரத்தில் இந்த இரண்டு சொற்களையும் விட்டு விட்டு  பிறகு அதை நியாயப் படுத்தி சிவசேனா பாராளு மன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத்தை விட்டு பேச செய்து , பின்பு ரவி சங்கர் பிரசாத்தை விட்டு இதுபற்றி தேசிய அளவில் விவாதம் தேவை என்று பேச விட்டது எல்லாம் ஒரு நாடகம் போலவே நடக்கிறது. 
     இருக்கும் பெரும்பான்மை பலத்தை வைத்து தங்கள் கொள்கைகளை நிறைவேற்றும் நோக்கிலேயே பா.ஜ.க அரசு செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. 
     அவசர கால சட்டம் பிரகடனப் படுத்தப் பட்ட காலத்தில் இந்திராகாந்தி கொண்டு வந்த 42 வது அரசியல் சட்டதிருத்தத்தின் மூலம் தான் இந்த இரண்டும் முகவுரையில் இடம் பெற்றன. 
      ஆனால் இதுவரை  எவராலும் இந்த திருத்தங்கள் கேள்விக்கு உள்ளாகப் படவில்லை. ஏனெனில் அவைகள்  இந்த நாட்டின் குணாதிசயங்கள்.    
     இந்த பன்முகம் கொண்ட நாட்டுக்கு பெருமை சேர்ப்பவை . 
அவைகளை எடுத்து விட்டால் இது இந்து நாடாகிவிடும். இந்து மதத்தில் நிலவும் சாதிய கொடுமைகளுக்கும் ஏற்றத் தாழ்வுகளுக்கும்நியாயம் கற்பிக்கப் பட்டுவிடும். 
     வளர்ச்சியை பேசி ஆட்சிக்கு வந்தவர்கள் வந்தபின் மக்களை அடக்கு முறைக்கு  தலை வணங்க  தயார் படுத்தும் வேலையில் இறங்குவது சரியல்ல.      
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here