Connect with us

தமிழர் வரலாற்றை மறைக்க முயன்ற மத்திய அரசின் சதி நீதிமன்ற தலையீட்டில் வெளிவந்தது??!!

archeologist-keezhadi

சட்டம்

தமிழர் வரலாற்றை மறைக்க முயன்ற மத்திய அரசின் சதி நீதிமன்ற தலையீட்டில் வெளிவந்தது??!!

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் எடுத்த பொருள் கி மு.. 905ம் ஆண்டை சேர்ந்தது என்று மதுரை உயர்நீதி மன்றத்தில் மத்திய அரசு தகவல் தந்தது.

இது எப்படி மத்திய அரசு செய்த சதியாகும் ?

கீழடி அகழாய்வில் சிறப்பாக பணி செய்து உண்மைகளை வெளிக்கொணர காரணமாக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணனை அசாமுக்கு மாற்றிய மத்திய அரசு என்ன காரணம் கூறியது? அப்போதே இது பற்றி எல்லா இதழ்களும் எழுதின.

இப்போதும் கூட மத்திய அரசு தானாக இந்த உண்மையை வெளியிட்டதா?

எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ் மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்

“ஆதிச்சநல்லூர் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடம்.  அங்கிருந்து 15 கி மீ தூரத்தில்தான் பாண்டிய நாட்டின் தலைநகரம் கொற்கை அமைந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. இதனால் 2004 ம் ஆண்டு அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது 114 ஏக்கர் பரப்பளவில் இடுகாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏராளமான பழங்கால பொருட்களும் கண்டு எடுக்கப்பட்டன.  அங்கு இதுவரை 4 கட்ட அகழாய்வு நடத்தப்பட்டது. அதன் அறிக்கை தற்போது வரை வெளியிடப் பட வில்லை. எனவே ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிடவும் அங்கு மீண்டும் அகழாய்வு நடத்தவும் கண்டெடுக்கப் பட்ட பழங்கால பொருட்களை அங்கேயே காட்சிப் படுத்தவும் உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது அகழாய்வில் கண்டடுக்கப்பட்ட பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்பும் படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பேரில் அந்த பொருட்களின் மாதிரி தொல்லியல் துறை சார்பில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அப்போதுதான் மத்திய அரசின் வழக்கறிஞர் ஆஜராகி,

“பரிசோதனை முடிவுகள் படி ஒரு பொருள் கி.மு. 905ம் ஆண்டையும் மற்றொன்று கி.மு.791 ம் ஆண்டையும் சேர்ந்தது என தெரிய வந்துள்ளது. இது தொடர்பான அறிக்கை தயாரித்து வழங்க கால அவகாசம் வேண்டும்” என்று கேட்டிருக்கிறார்.

அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கி மு.395ம் ஆண்டு காலத்தை சேர்ந்தவை என்றும் தெரிவித்தார்.

அப்போது மனுதாரின் வழக்கறிஞர் திண்டுக்கல் பாடியூரில் தொல்லியல் துறைக்கு  சொந்தமான இடம் ஆக்கிரமிப்பில் பள்ளியாக உள்ளது. பழனி ரவிமங்கலத்தில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் உள்ளன. இது பற்றியும் ஆய்வு நடத்த வேண்டும் என்றார்.

இதுபற்றி ஆய்வு மேற்கொள்ள வேண்டியது  மாநில அரசா மத்திய அரசா என்று  கேட்டு வழக்கை உயர்நீதி மன்றம் ஒத்தி வைத்திருக்கிறது.

கொடுமை என்னவென்றால் மத்திய தொல்லியல் துறை தனக்கு இந்த தடயங்கள்/சான்றுகள் கிடைத்து பல ஆண்டுகளாக ஏன் கார்பன் பரிசோதனைக்கு அனுப்ப வில்லை  என்பதையும் அதற்காக பல அறிவுஜீவிகளும் வரலாற்று ஆய்வாளர்களும் முயற்சித்தும் அது நடை பெற வில்லை  என்பதையும் நீதி மன்றம் பதிவு செய்தது.

2003ல் எடுக்கப்பட்ட சான்றுகள் இரண்டு. அவற்றில் ஒன்று கி.மு.696-540  ஆண்டுகளுக்கு முற்பட்டவை அதாவது சுமார் 2645-2489  ஆண்டுகளுக்கு முந்தியவை  மற்றொன்று கி.மு. 791-701 ஆண்டுகளுக்கு முற்பட்டவை அதாவது சுமார் 2740-2650 ஆண்டுகளுக்கு முந்தியவை என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.

பதினாறு ஆண்டுகளாக பரிசோதனைக்கு உட்படுத்தப் படாததற்கு பெயர் சதி இல்லாமல் வேறென்ன? 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in சட்டம்

To Top