Connect with us

கருத்துரிமை காத்த உச்சநீதிமன்ற தீர்ப்பு !!! தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு 66 A செல்லாது!! ஆனால் விமர்சனத்தில் எச்சரிக்கை தேவை??

Latest News

கருத்துரிமை காத்த உச்சநீதிமன்ற தீர்ப்பு !!! தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு 66 A செல்லாது!! ஆனால் விமர்சனத்தில் எச்சரிக்கை தேவை??


               முந்தைய காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட இந்த சட்டப்பிரிவு கோபமூட்டும் அல்லது அச்சுறுத்தும் வகையில் தகவல் அனுப்புவது, மிரட்டல், விரோதம், வெறுப்பு , கெட்ட நோக்கம் , காரணமாக தகவல் அனுப்புவது ஏமாற்றுதல் அல்லது தவறாக வழி காட்டும் விதமாக மின் சாதனம் மூலம் தகவல் அனுப்புவது ஆகியவை  இரண்டு  ஆண்டு முதல் மூன்று ஆண்டு வரை சிறை மற்றும் அபராதம் விதிக்கத்தக்க சட்டம். 
               பேஸ்புக், வாட்ஸ் அப் , போன்ற வலைத் தளங்களில் இனிமேல் எச்சரிக்கையாக கருத்து தெரிவிப்பது நல்லது.  
               விவாதம், பரிந்துரை செய்தல் என்ற இரண்டு நிலை வரைக்கும் அடிப்படை உரிமையாக இருக்கும் இந்த செயல் தூண்டுதல் என்ற மூன்றாம் நிலைக்கு செல்லும்போதுதான் அது தண்டிக்கதக்க குற்றமாக மாறுகிறது என்பதுதான் தீர்ப்பின் சாராம்சம். 
               ஆனால் கெட்டவார்தைகளை பயன்படுத்துதல் , திட்டுதல், ஆபாசமாக வர்ணித்தல் போன்றவை தொடர்ந்து தண்டிக்கத் தக்க குற்றங்களாகவே தொடரும். 
              அரசியல் சட்டம் தரும் அடிப்படை உரிமைகள் ஒவ்வொன்றிற்கும் நியானமான கட்டுப் பாடுகளை அரசியல் சட்டமே வகுத்திருக்கிறது .   
              கட்டுபாடுகளை கடைபிடிக்காமல்  அடிப்படை உரிமைகளை பிறர் புண் படும் படி பயன் படுத்துவோம் என்பதே சிலரின் நோக்கமாக இருக்கின்றது.    
              மாறுபடுவது என்பது அடிப்படை உரிமை.   அதை அனுமதிக்க மறுப்பது ஒருவகை சர்வாதிகாரம்.    மனித குல வளர்ச்சியே  மாறுபடுவது என்ற குணத்தில் தான் வந்தது. இன்று பலருக்கும்  பிடிக்காதது நாளை எல்லாருக்கும் பிடிக்கும் என்று மாறுவதுதான் வாழ்க்கை. 
            எந்த நல்ல சட்டத்தையும் ஒரு கெட்ட நபர் சுயநல நோக்கத்தில் செயல் படுத்தும்போது அந்த நல்ல சட்டமே கெட்ட சட்டமாகி விடுகிறது. 
            சமுதாயம் விழிப்புணர்வு நிலையில் நிலைத்திருந்தால் மட்டுமே சட்டத்தை தவறாக பயன் படுத்தும் கயவர்களிடம் இருந்து  உரிமைகளை தக்க வைக்க முடியும். 
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Latest News

To Top