கோட்சே தூக்கிலிடப்பட்ட நவம்பர் 15 ம் நாளை தியாகிகள் தினமாக கொண்டாட திட்டமிடும் இந்து மகாசபை மீது நடவடிக்கை என்ன? காந்தியை மீண்டும் மீண்டும் கொலை செய்ய அனுமதிக்குமா மோடி அரசு?

                தேசத்தின் அடையாளம் காந்தி .    அதனால்தான் ருபாய் நோட்டுகளில் அவர் மட்டுமே இருக்கிறார்.   அவரோடு ஒத்துப் போகாதவர்கள் கூட அவரை நேசிக்கத் தவறியதில்லை. 

               ஆனால் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவரை அவமதிப்பதில்  கண்ணும் கருத்துமாக இருப்பார்கள் இந்து இயக்கங்கள். 
 அவர்கள் என்ன பெயரில் இயங்கினாலும் எத்தனை குரலில் பேசினாலும் கருத்தில் ஒன்று பட்டே இருப்பார்கள். 
              இந்த நிலையில் ஏற்கனவே பல பிரச்சினைகளில் பா ஜ க அரசு மாட்டிக்கொண்டு அவதிபடுகையில் இந்து மகா சபை தலைவர் சந்திர பிரகாஷ் கௌசிக் இந்த அறிவிப்பை வெளியிட்டி ருப்பது நாடு முழுதும் எதிர்ப்பு அலைகளை எழுப்பும் என்பதில் சந்தேகமில்லை. 
               நடவடிக்கை எடுத்தால் பா ஜ க தப்பிக்கும் .    மறுத்தாலோ தாமதித்தாலோ பழியிலிருந்தும் விளைவிலிருந்தும்  தப்பிக்கவே முடியாது. 

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here